சியாச்சின் மலைப்பகுதி

டில்லி:

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சியாச்சின் மலையில் உள்ள ராணுவ முகாமிற்கு செல்கிறார். இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பனி படர்ந்துள்ள சியாச்சின் முகாமில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடுவார் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ராணுவ அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ராம்நாத் கோவிந்த்  முதன் முறையாக சியாச்சின் பகுதி செல்வது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த 2004ம் ஆண்டு அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஜம்மு-காஷ்மீரில் உள்ள சியாச்சின் முகாமிற்கு சென்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். அதைத்தொடர்ந்து தற்போது ராம்நாத் கோவித் சியாச்சின் மலைப்பகுதிக்கு செல்கிறார்.

இதையொட்டி அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.