சென்னை:

மிழகத்தில் அரசு வேலைக்காக, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் வரை அரசு  வேலைக்காக பதிவு செய்துவிட்டு  காத்திருப்போரின் எண்ணிக்கை 78.60 லட்சம் பேர் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் ஐடி கம்பெனிகளின் வேலைவாய்ப்பு குறைந்துள்ள நிலையில்,பெரும்பாலோர் அரசு வேலைக்கு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில இந்தாண்டு, ஏப்., வரை, 78.60 லட்சம் பேர், தங்கள் பெயரை அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

இதில் தற்போது 57 வயதை எட்டியவர்கள் 6047 பேரும் உள்ளனர். இவர்களின் அரசு வேலை கனவு காணல்நீராகவே போகும் நிலை உருவாகி உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள விவரப்பட்டியல்: 

மொத்தம் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை (ஏப்,30, 2018)  78.60 லட்சம் பேர்

பள்ளி மாணவர்கள், 18.39 லட்சம்;

கல்லுாரி மாணவர்கள், 18.93 லட்சம்

படிப்பை முடித்த இளைஞர்கள், 29.85 லட்சம்  அரசு வேலைக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், 36 முதல், 56 வரையிலானோர், 11.35 லட்சம் பேர்

57 வயதுக்கு மேற்பட்டோர், 6,047 பேர்.