ரக்கோணம்

சுமார் 20 நாட்களுக்குப் பிறகு அரக்கோணம் தடத்தில் ரெயில் சேவைகள் சீராகி உள்ளன.

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நடைமேடை நீட்டிப்புப் பணி மற்றும் பொறியியல் பணிகள் கடந்த 20 நாட்களாக நடந்து வந்தன.

இதனால் பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

ஒரு சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

தற்போது இந்த பணிகள் முடிவடைந்துள்ளன.

இதனால் இன்று முதல் ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப் படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.