
டில்லி
புகழ்பெற்ற இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் 77% பங்குகளை அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் வாங்கி உள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தியாவின் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் புகழ் பெற்று விளங்குகிறது.
அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் பலதரப்பட்ட வர்த்தக மையங்களை நிறுவி புகழ் பெற்றுள்ளது.
பல நாட்களாகவே ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் வாங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் வால்மார்ட் நிறுவனம் ஃப்ளிப்கார்ட்டின் 77% பங்குகளை வாங்கி அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆகி உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக வால்மார்ட் நிறுவனம் தற்போது அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel