சென்னை

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.

ஆடிட்டர் குருமூர்த்தி என அழைக்கபடும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.  அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்விக் கணைகள் தொடுத்தனர்.   அதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

அவரது பேட்டியில், “தமிழக முதல்வரை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்காதது சரியே.  தமிழக முதல்வருக்கு நேரம் ஒதுக்கினால் அடுத்ததாக கர்நாடக முதல்வர் நேரம் கேட்பார்.   ஒவ்வொரு முதல்வரையும் சந்திப்பது மட்டுமே பிரதமர் வேலையா?

தற்போது தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.  அந்த வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார்.

நான் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுடன் அரசியல் குறித்து பேசுவேன்.  அதே நேரத்தில் நான் அவர்களுடைய அரசியல் ஆலோசகர் இல்லை” என தெரிவித்துள்ளார்.