மும்பை:

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் முதல் செப்டம்பர் வரை அயர்லாந்து, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இதில், டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் அயர்லாந்துக்கு எதிராக 2 மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. டி20 போட்டிகளுக்கான இந்திய அணி விபரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் அம்பதி ராயுடுவிற்கு இடம்பிடித்துள்ளார்.

அதேபோல் சித்தார்த் கவுல், வாஷிங்டன் சுந்தர, லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். தென் ஆப்பிரிக்கா தொடரில் விளையாடிய ரகானேவுக்கு இதில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ஒருநாள் போட்டி அணி விபரம்….-

விராட் கோலி (கேப்டன்), தவான், ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், அம்பதி ராயுடு, டோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார், பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.