சென்னை:

சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் வணிக வளாகத்தில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதித்துள்ளது.