புனே
பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பில் 76% வரை உள்நாட்டுப் பொருட்கள் இன்னும் 6 மாதத்தில் உபயோகிக்கப் படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை உலகின் மிகவும் விரைவான ஏவுகணைகளில் ஒன்றாகும். இந்த ஏவுகணை கடற்படையினரால் பெரிதும் உபயோகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட இலக்கை அதி விரைவான வேகத்தில் சென்று தாக்கும் வகையில் உருவாக்கப்படும் இந்த ஏவுகணைகள் இந்திய பாதுகாப்புத் துறையினரால் எல் அண்ட் டி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படுகிறது.
இந்த ஏவுகணை குறித்து ராணுவ தளவாட அதிகாரி ஒருவர், “இந்த ஏவுகணைகள் உருவாக்கத் தொடங்கிய புதிதில் இதில் 10-12% வரையிலான உள்நாட்டுப் பொருட்கள் உபயோகப் படுத்தப்பட்டு வந்தன. சிறிது சிறிதாக அவை அதிகரிக்கப்பட்டு தற்போது 65% வரை உள்நாட்டுப் பொருட்கள் உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. இன்னும் 6 மாதங்களில் இந்த ஏவுகணை தயாரிப்பில் சுமார் 76% வரை உள் நாட்டுப் பொருட்கள் உபயோகப்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.