மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் கொல்கத்தா அணியும் மும்பை அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி பேட்டிங் செய்தது.


91 ரன் எடுத்திருந்த நிலையில் முதல் விக்கெட்டை மும்பை பறிகொடுத்தது. தொடர்ந்து ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. பாண்ட்யா 35 ரன்களுடன், டுமினி 13 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.