புனே:
ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று புனேயில் நடந்தது. இதில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தது. சவுத்தீ (36) அவுட்டாகாமல் இருந்தார். சென்னை சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
128 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய சென்னை அணி 18 ஓவரில் வெற்றியை ருசித்தது. 4 விக்கெட்டுளை இழந்து 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோனி 31 ரன்களுடனும், பிராவோ 14 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.