வேலூர்:

வேலூர் அருகே அரசு  அலுவலகத்திலேயே முன்னாள் அதிமுக கவுன்சிலர் மர்ம நபர்களால் பட்டப்பகலில்  படுகொலை செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு இன்று காலை  அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகேந்திரன் என்பவர் வந்திருந்தார். அவரை   மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு கொலையாளிகள் தப்பி விட்டனர்.

இது அரசு அலுவலகத்தில் இருந்தவர்களிடையே பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. பட்டப்பகலிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியிலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மகேந்திரன் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மெலும்,  முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெறும் என்றும் அணைக்கட்டு போலீசார் தெரிவித்து உள்ளனர்.