சென்னை:

மிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மையங்கள் வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மாணவர்களின் எண்ணிக்கையை கருதி, கூடுதல் நீட் தேர்வு மையங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் திட்ட மிட்டசெயல் என்றும், தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்குபெறுவதை தவிர்க்கும் பொருட்டு வேண்டுமென்றே சிபிஎஸ்இ கல்வி வாரியம் மத்தியஅரசுக்கு துணைபோனதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நீட் தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் தமிழக அரசு மெத்தனமாக இருந்துள்ளதாகவும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப  தமிழகத்தில் கூடுதல் நீட் தேர்வு மையங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், நேற்று திமுக தலைவர் கருணாநிதி, செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை பாரதியஜனதா அதிருப்தி தலைவர்கள் சந்தித்து சென்றது குறித்த கேள்விக்கு,  கருணாநிதி, ஸ்டாலினை முக்கிய தலைவர்கள் சந்திப்பது மரியாதை நிமித்தமானது என்றும், இந்த சந்திப்பு கூட்டணிக்கான சந்திப்பு அல்ல என்றும் கூறினார்.