நெல்லை:

த்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பதிவிட்ட பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர்மீது சென்னை, நெல்லை உள்பட பல நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

நெல்லையில் தொடரப்பட்ட வழக்கு, நடிகர் எஸ்வி.சேகர் அடுத்த மாதம் (ஜூன்) 18ந்தேதி  நெல்லை கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி  நீதிபதி உத்தரவிட்டார்.

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரண மாக அவர் தலைமறைவாக உள்ளார். அவரது உறவினரான  தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பாதுகாப்பாக மறைத்து வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் முன்ஜாமின் கேட்டு எஸ்வி.சேகர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு முன்ஜாமின் வழங்க மறுத்தும், அவரை கைது செய்து விசாரணை செய்யலாம் என்றும் போலீசாருக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் எஸ்.வி.சேகர் மீது நெல்லையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், ஜூன் மாதம் 18-ந்தேதி. எஸ்.வி.சேகர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.