மேஷம்

தந்தைவழி உறவினர்களிச் சந்திக்க வாய்ப்பு வரும். யாருக்குத் தெரியும். பிதுரார்ஜித சொத்துக்கள்கூட வந்தாலும் வரும்.பேச்சில் கவர்ச்சியம்சம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். உங்கள் பேச்சினால் பிரிந்தவர்கள் இணைவார்கள். குடும்பத்தில் காதல் திருமணங்கள் நடக்க வாய்ப்புள்ளது. நிச்சயமான திருமணம் நடைபெறுவதில் சிறு தாமதங்கள் இருந்தாலும், நல்லபடியாக முடியும். கவலை வேண்டாம். பெண்களுக்கு இருந்துவந்த கர்பப்பை சம்பந்தமான பிரச்சினைகள் சரியாகும். உத்தியோகத்தில் திடீரென்ற திருப்பம் ஒன்று நிகழ்ந்து உங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும்.

ரிஷபம்

சகோதர சகோதரிகள் திடீரென்று உங்களைச் சந்திக்க வருவதோடு பாசமழை பொழி வார்கள். ரியல் எஸ்டேட் அல்லது கட்டடத்துறையில் உள்ளவர்களுக்கு உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் செழிப்பு கூடும். தந்தைக்கு திடீர் நன்மைகள் ஏற்படும். படிப்பு விஷயத்தில் செலவினங்கள் கூடும். கணவன் / மனைவிக்கிடையே அன்னியோன்னியமான சூழல் இருக்கும். காதல் கைகூடும். அலுவலகத்திலும், சுற்றுவட்டாரத்திலும், உங்களின் தவறும் தன்மை அதிகரிக்கும். சட்டென்று ஏதாவது வார்த்தகளி உதிர்த்து சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கப் பாருங்க.

சந்திராஷ்டமம் : 03.05.2018 முதல் 06.05.2018 வரை

மிதுனம்

நீங்கள் காத்திருந்த நன்மைகள் படிப்படியாக உங்களை வந்தடையும். குறிப்பாக, அரசாங்கத்திடமிருந்தும், கல்வித்துறையிலிருந்தும் லாபமும் வருமானமும் வரும். எதை யெடுத்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்படுகிறதே என்கிற பயம் வேண்டாம். போகப் போகச் சரியாகும். ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்துங்கள். முதலில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று சொன்ன டாக்டர்கள், இனி அது வேண்டாம் என்றும் மருந்தினாலேயே குணமாகும் என்றும் கூறுவாகள். புத்தக விற்பனை செய்பவர்களுக்குப் பொற்காலம்.

சந்திராஷ்டமம் : 06.05.2018 முதல் 08.05.2018 வரை

கடகம்

கணவன் மனைவிக்கிடையே சண்டையோ, வாக்குவாதமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். படிப்பு சம்பந்தமான விஷயங்களில் சிறு டென்ஷன்கள் இருக்கலாம்.  ஆனாலும் உங்கள் தெய்வ வழிபாடு அதைச் சரியாக்கும். குடும்பத்தில் யாரேனும் வெளி நாட்டிலிருந்தால் அவர்களுக்கும், அவர்களால் உங்களுக்கும்  திடீர் நன்மைகள் நிகழும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் முழுமையாகத் தீரும். இத்தனை நாள் காணாமல் போயிருந்த தைரியமும் துணிச்சலும் இப்போது உங்களிடம் வந்து ஒட்டிக்கொள்ளும்.

சந்திராஷ்டமம் : 08.05.2018 முதல் 11.05.2018 வரை

சிம்மம்

தந்தைக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பண ரீதியாகவும் ஏற்பட்டிருந்த சில சின்னச் சின்னப் பிரச்சினைகள் இன்னும் சில நாட்களிலேயே தீர்ந்துவிடும். கலைத்துறையில் ஈடுபட்டிருப்போர்க்கு மிகப் பெரிய நன்மைகள் ஏற்படும். தாயாரின் செல்வாக்கு அதிகரிக்கும். கலை சம்பந்தமான கல்வி கற்போர்க்கு புகழ் கிடைக்கும். புதிய நண்பர்கள் விஷயத்தில் சற்றே அதிக கவனத்துடன் இருக்கவேண்டிய சமயம் இது. செலவினங்கள் ஓரளவு கட்டுப்படும். எனினும், சில திடீர் செலவுகளை நீங்கள் எதிர்பார்த்தே ஆகவேண்டும்.

கன்னி

குழந்தைகளால் ஏற்படும் டென்ஷன்களைப் பெரிதாக நினைத்து வருத்தம் கொள்ள வேண்டாம். தானே சரியாகும். சகோதர சகோதரிகளின்மீது புகழ் வெளிச்சம் விழும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழ்வதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகும். தாயாருக்கும் உங்களுக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டு அதற்கு நீங்கள் காரணமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகள் டாக்டருக்குப் படிக்க முயற்சி செய்ய றாங்களா? அப்படியானால் அவர்களுக்கு முழு வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு வருமானம் வரும்.

 துலாம்

குழந்தைகளும், கணவர் / மனைவியும்   உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக நடந்து கொள்வார்கள். தன்னம்பிக்கையும், மனநிறைவும் ஏற்படும்படியாக விருதுகள் அல்லது பாராட்டுக் கிடைக்கும். தலைமைப் பொறுப்புகளை ஏற்கவேண்டி வரும். உங்களின் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளும், தீர்மானங்களும், பேச்சும் உங்களுக்கு மிகுந்த பெருமையை ஏற்படுத்தும். எதிர்பாலினத்தினரால் பெரிய உதவிகள் கிடைக்கும். தாயாருக்கு திடீர் நன்மைகள் ஏற்படும். மருத்துவப் படிப்பு சம்பந்தமான முயற்சிகள் வெற்றிபெறும்.

விருச்சிகம்

எதுக்கெடுத்தாலும் பயப்பட்டால் எப்படிங்க? நீங்கள் மலை சைஸுக்கு எதிர்பார்த்த பிரச்சினைகள் உண்மையில் கடுகாய் மாறிவிடுமுங்க. கவர்ச்சி அம்சம் அதிகரிப்பதுடன் செல்வாக்கும் கூடும்.  உயர் பதவியிலும், அரசாங்கப் பொறுப்பிலும் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். அது இப்போது மட்டுமல்லாமல் எப்போதுமே நன்மை தரும். பொதுவாகவே நண்பர்களுக்கு நீங்களும், உங்களுக்கு நண்பர்களும் பரஸ்பரம் உதவி செய்துகொள்வீர்கள். புது வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். இத்தனை காலம் தைரியமின்றித் தள்ளி போட்டுக் கொண்டிருந்த நல்ல காரியங்களை துணிந்து நிறைவேற்றுவீர்கள்.

தனுசு

பேச்சில் பச்சை மிளகாய் கலக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கோக்குமாக்காகப் பேச வேண்டாமே. கல்வி சம்பந்தமான முயற்சிகள் சற்றே சுணங்கினாலும் கொஞ்சம் பொறுமையா இருந்தா சரியாயிடும். குழந்தைகளின் கல்வி சம்பந்தமான முயற்சிகள் மெகா வெற்றி அளிக்கும். பிதுரார்ஜித சொத்துக்களில் பங்கு கிடைக்கும். ஆரோக்கியத்தை மட்டும் அபார கவனத்துடன் பாத்துக்குங்க. குழந்தைகளின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். இவ்வளவு காலம் திருமணத்துக்குக் காத்திருந்தவங்க சந்தோஷத்துடன் காலண்டரை எடுத்து நாள் பாக்க ஆரம்பிக்கலாமுங்க. 

மகரம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலான சாதனைகள் செய்து புகழ் அடைவீங்க. வக்கீலுக்குப் படிக்க நினைச்சவங்க எண்ணம் நிறைவேறும். திடீரென்று வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் உங்களை உயர் நிலைக்கு இட்டுச் செல்லும். தாயாருக்கு அரசாங்கத்திலிருந்து நல்ல செய்தி வருமுங்க. உத்தியோகத்தில், நீங்க எதிர்பார்த்த முன்னேற்றமும், திருப்பமும் ஏற்பட இன்னும் சிறிது காலமே பொறுத்திருக்க வேண்டும். எனவே, டென்ஷனை விடுங்க. குழந்தைங்க மேடையேறிக் கைதட்டல்களும், பாராட்டுகளும் பெறுவாங்க.

கும்பம்

கலைத்துறையில் இருப்பவங்களுக்கு புதிய வாய்ப்புக்கள் தேடிவரும். படிப்பில் முதன்மை யாய் வருவீங்க. படித்த படிப்புக்கு ஏத்த உத்தியோகமும், தொழிலும் அமைவதால் ஆர்வத் துடன் வேலை செய்வீங்க. வரவேண்டிய தொகைகள் தாமதமாக வந்தாலும் ஒழுங்காக வரும். அப்பாவுக்கு பெருமிதம் அளிக்கும்படியான தகவல்கள் வரும். சினேகிதர்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தாகவேண்டும். எந்த நண்பன் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் காலைவாரக்கூடும்.

மீனம்

உங்கள் பேச்சில் உள்ள வசீகரமும் நேர்மையும் மற்றவர்களைக் கவரும். நீங்கள் பேசுவது பலிக்கும் என்பதால் அதீத கவனத்துடன் வார்த்தகளைக் கலந்து பரிமாறுங்க. குடும்பத்தில் புதிய வரவுகள் உண்டு. உங்கள்மீது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திக்குங்க. நீங்க சற்றும் எதிர்பாக்காத வருமானங்கள் வரும். எப்போதோ எதிர்பார்த்து, நம்பிக்கையிழந்த தொகை கள்கூட நீங்க ஆச்சரியப்படும்படியாக உங்களை வந்தடையும். கல்யாணம் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியடையும். அப்பாவுக்கு செல்வாக்கும், புகழும் அதிகரிக்கும்.