பரமக்குடி:
மத்திய அரசின் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வந்துள்ளார்.
நேற்று மதுரை வந்த அவர் ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது, அவருக்கு எதிராக திமுகவினர் கருப்புகொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னால் வந்த பாஜகவினர் கார் மீது செருப்பு வீசப்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு நிலவியது.
காவிரி பிரச்சினை குறித்த கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன், மற்ற மாநிலங்களின் கருத்துக்களை கேட்டுத்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் என்று கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமைச்சர் நிர்மலாசீதாராமனின் காருக்குப் பின்னால் வந்த பாஜகவினரின் கார்கள் மீது செருப்பு மற்றும் கற்கள் வீசப்பட்டன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன் கூறுகையில் கருப்புக் கொடி காட்டுவது திமுகவின் உரிமை. திமுகவினர் கருப்புக்கொடி காட்டியது பற்றி எனக்கு கவலையில்லை என்றார்.