
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 30 பேர் தாம்பரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுதும் அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும், மாணவர் அமைப்புகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியினர் இன்று காலை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். புறநகர் மின்சார ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபடமுயன்ற நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் 30 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel