லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற விடைத்தாளில் ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக வைத்திருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் நடந்த பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளை தடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் தேர்வுக்கு பயந்து 1.8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. தற்போது, விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது.

முறைகேடுகளில் ஈடுபட முடியாத பல மாணவர்கள் விடைத் தாள்களில் ரூபாய் நோட்டுக்களை வைத்து தங்களை தேர்ச்சி பெறச் செய்யுமாறு ஆசிரியர்களை கேட்டுக் கொண்டுள்ளனர். பல மாணவர்கள், 50, 100, 500 ரூபாய் நோட்டுகளை, விடைத்தாளுடன் இணைத்து சிலர் குடும்ப சூழலை கூறி கடிதமும் எழுதி வைத்துள்ளனர்.