சென்னை:
தமிழக அரசின் தலைமை செயலகம் பகுதியை புகையில்லா இல்லாத் தலைமைச் செயலகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தமிழக அரசின் தலைமை செயலகம் மற்றும் சட்டசபை வளாகத்தில் புகையிலைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தலைமை செயலக வளாகத்தில் புகையிலை பொருட்கள் விற்கவோ, வாங்கவோ, புகை பிடிக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குட்கா-பான் மசாலா போன்ற புகையிலைப் பொருள்களுக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தலைமைச் செயலகத்திலும் புகையிலைப் பொருள்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டி ருக்கிறது.
இதனால், தலைமைச் செயலக வளாகத்தினுள் உள்ள சிறு கடைகளிலும் புகையிலைப் பொருள்கள் விற்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புகையிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “புகையிலை இல்லாத தலைமைச் செயலகம்” என்ற வாசகங்கள் இடம்பெற்ற அறிவிப்புப் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
புகையிலைப் பொருள்களை தலைமைச் செயலக வளாகத்துக்குள் பயன்படுத்துவது குற்றம் என்றும் விளம்பரத் தட்டிகள் மூலம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.