குணா, மத்தியப் பிரதேசம்

பாஜக சட்டமன்ற உறுப்பினர் பெண்களுக்கு ஆண் நண்பர்கள் தேவை இல்லை எனக் கூறி உள்ளார்.

மத்தியப் பிரதேசம் குணா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் பன்னாலால் சாக்யா.  இவர் பாஜகவை சேர்ந்தவர்.  இவர் அவ்வப்போது கூறும் கருத்துக்கள் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது.    சென்ற வருடம்  கிரிக்கெட் வீரர் விராத் கோலி தனது காதலி அனுஷ்கா சர்மாவை இத்தாலியில் மணம் புரிந்தார்.  அதற்கு பன்னாலால் அதை விராட் கோலியின் நாட்டுப்பற்று எனக் கூறியது சர்ச்சையை உண்டாக்கியது.

தற்போது பன்னாலால் குணா  அரசுக் கல்லூரியில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டார்.  அப்போது அவர், “பெண்கள்க்கு ஆண் நண்பர்கள் தேவை இல்லை.  அவர்கள் ஆண்களுடன் நட்பு கொள்வதை நிறுத்தினால் அவர்களுக்கு நேரும் பல கொடுமைகள் குறைந்து விடும்.  சமீபத்தில் ஒரு மத்திய பிரதேச தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் இதே கருத்தை தெரிவித்துள்ளேன்.

சர்வதேச பெண்கள் தினம் என்பது மேற்கத்திய வழக்கம்.   நமது இந்திய வழக்கப்படி பெண்களுக்கு தனி மதிப்பு உண்டு.   பெண்களுக்காக அவர்கள் ஒரே நாளை ஒதுக்கி உள்ளனர்  ஆனால் நாம் நான்கு நாட்கள் பெண்கள் தினத்தை கொண்டாடுகிறோம்.   பெண்களை வருடத்துக்கு நான்கு முறை வழிபடுகிறோம்”  என தனது உரையில் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]