மும்பை

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் பிரபல வைர வியாபாரி ருசல் மேத்தா மகள் ஸ்லோகா மேத்தா நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

பிரபல தொழிலதிபரும் தற்போது தொலை தொடர்புத் துறையில் முன்னணியில் உள்ள ஜியோ நிறுவனத் தலைவருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி.   இவரும் ஜியோ இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.   இவர்கள் குடும்பத்துக்கும் பிரபல வைர வர்த்தக நிறுவனம் ரோசி புளூ டைமண்ட் நிறுவனத்தின் உரிமையாளரான ருசல் மேத்தா வின் குடும்பத்துக்கும் நட்பு இருந்தது.

ஆகாஷ் அம்பானிக்கும் ருசல் மேத்தா மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் இடையில் நட்பு இருந்தது.   அவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அதிகாரபூர்வமற்ற தகவல் வெகுநாட்களாக உலவிக் கொண்டு உள்ளது.   கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனில் அம்பானியின் திருமண அழைப்பிதழ் தங்கத்தில் தயாராகி உள்ளதாகவும் ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சம் எனவும் செய்திகள் வந்தன.

இரு குடும்பத்தினரும் இது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.  இந்நிலையில் கோவாவில் ஆகாஷ் அம்பானிக்கும் ஸ்லோகா மேத்தாவுக்கும் நிச்சய தார்த்தம் நடந்ததாகவும்,  இந்த மாதம் டிசம்பர் மாதம் இருவரின் திருமணமும் நடைபெற உள்ளதாகவும் இரு குடும்பத்துக்கும் நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதை உறுதிப் படுத்துவது போல நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.     மேலும் வசந்த நவராத்திரியை முன்னிட்டு முகேஷ் அம்பானி மும்பை சித்தி வினாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்துக்கு இன்று ஏற்பாடு செய்துள்ளார்.   வசந்த நவராத்திரியின் கடைசி தினமான இன்று ஸ்லோகா முதல் ஆரத்தியை எடுக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

[youtube-feed feed=1]