
சென்னைக்கு மீண்டும் வருவது எனது வீட்டுக்கு வருவதைப் போன்றது என்று மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிராவோ நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் சீசன் 2018 ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க இருக்கிறது. இதையடுத்து ஐபிஎல் சீசனில் விளையாட வுள்ள வெளிநாட்டு வீரர்கள் அவர்கள் இடம்பெற்றுள்ள அணிகள் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ சென்னையில் தன்னுடைய சக அணி வீரரான முரளி விஜய்யுடன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது ன்னைக்கு மீண்டும் திரும்பியுள்ளது குறித்து கேள்விக்கு பதில் அளித்த பிராவோ, ”சென்னைக்கு வருவது என்பது வீட்டுக்கு வருவதைப் போன்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இப்போது கிடைத்திருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து அணியில் மீண்டும் பங்கேற்க வைத்த அணியின் நிர்வாகத்துக்கு நன்றி. சிறப்பாக விளையாடுவேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தது எனக்குத் தெரியும். திரும்பி வந்துள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சி தந்துள்ளது. குறிப்பாக விஜய் மீண்டும் அணியில் இணைந்திருக்கிறார். போட்டிகளை ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறோம்” என்று பிராவோ தெரிவித்தார்.
[youtube-feed feed=1]