
டில்லி:
மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மல்லிகார்ஜுன் கார்கே, லோக்சபா செகரட்டரியிடம் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கடிதம் கொடுத்துள்ளார்.
இன்று (23.3.18) லோக்சபா செயலாளரை சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
அதில், பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த அரசு மீது நம்பிக்கையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் 27ந்தேதி விவாதத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படு கிறது.

ஏற்கனவே ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்சினையில், ஆந்திராவுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக, ஆந்திர மாநில கட்சிகளான தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கை யில்லா தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற அமளி காரணமாக, அதுகுறித்த விவாதம் எடுத்துக்கொள்ளப்படுவது தவிர்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது காங்கிரஸ் சார்பாகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]