
சென்னை:
கடலுக்கு சென்றுள்ள குமரி மாவட்ட மீனவர்களை உடனே கரைக்கு திரும்ப வலியுறுத்தி விமானங்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
வடக்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றத்தழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும், அதன் காரணமாக 40 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என்றும், மீனவர்கள் மேலும் சில நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கடலுக்குச் சென்ற மீனவர்களை காக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும், கடலுக்குள் சென்றுள்ள மீனவர்களை காக்க ரேடியோ, மற்றும் விமானங்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அவர்களை உடனே கரை திரும்ப உத்தரவிப்பட்டுள்ளது என்றார்.
மேலும் ஏற்கனவே சங்கு கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளவர்களுக்கும் தகவல் கொடுக்க முயற்சி செய்து வருகிறோம் என்ற அமைச்சர், மீனவர் அமைப்புகள், கடற்படை, கடலோரக் காவல் படை மூலம் மீனவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.
[youtube-feed feed=1]