டில்லி
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் அலவன்சுகள் உயர்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிற தொகுதி அலவன்சு, பர்னிச்சர் அலவன்ஸ் ஆகியவற்றை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் தற்போதுள்ள தொகுதி அலவன்ஸ், மாதம் ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயர்கிறது. அதேபோல ஒரு முறை வழங்கப்படுகிற பர்னிச்சர் அலவன்சு ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் என உயர்த்தப்படுகிறது.
இதனால் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும். மத்திய அரசு மாதம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் செலவிடுகிறது.