மிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யபிரத சாகு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த  சத்ய பிரத சாகு, , 1997-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். சென்னைப் பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநராக தற்போது இவர் பொறுப்பு வகிக்கிறார்.

தமிழகத் தேர்தல் அதிகாரியாக கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரில் ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டார்.   2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், திருமங்கலம்,,  அரவக்குறிச்சி, தஞ்சாவூர்,   தொகுதி இடைத்தேர்தல்களை அவர் நடத்தி முடித்தார்.

மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய ஆர்.கே.நகர் இடைத்தர்தலை ஒத்திவைத்து மீண்டு நடத்தி முடித்தார்.

இதற்கிடையே குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகியவற்றிலும் பங்குபெற்றார்.

இந்த நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியிலிருந்து அவரை மாற்றிவிட்டுப் புதிய அதிகாரி ஒருவரை நியமிக்க ஏற்பாடுகள் நடந்தன.

இதையடுத்து, டிட்கோ தலைவர் ரமேஷ் சந்த் மீனா, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளராக இருக்கும் கார்த்திக், சென்னைப் பெருநகரக் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் சத்ய பிரத சாகு ஆகிய மூவர் பெயர்களை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர்  இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டனர்.

அவர்களில் பிரத சாகு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.