கேப்டவுன்,
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த 6வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில், 229 ரன் எடுத்திருந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டரான கோலி, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 6 ஒரு நாள் மேட்ச் தொடரில் 558 ரன்கள் அடித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியினர் தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அங்கு இரு அணியினருக்கும் இடையே 3 டெஸ்ட் மேட்ச், 6 ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது.
தற்போது நடைபெற்று முடிந்துள்ள 6 ஒருநாள் தொடரில் 5ல் இந்திய அணி வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், இரு அணி சர்வதேச ஒருநாள் தொடரில் 500 ரன்கள் கடந்து விரோட் கோலி சாதனை படைத்துள்ளார்.‘
இந்தியா தென்னாப்பிரிக்கா இடையே கடைசி ஒருநாள் போட்டி நேற்று செஞ்சுரியனில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 5-1 என கைப்பற்றியது.
இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி அதிரடி ஆட்டம் மூலம் 129 ரன்கள் எடுத்தார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவரது 35-வது சதமாகும்.
இது கோலி தென்னாப்பிரிகாவுடன் விளையாடி வரும் 6 ஒரு நாள் போட்டில் எடுத்துள்ள 3வது சதம். அதுபோல ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
ஏற்கனவே இந்திய வீரர் ரோகித் சர்மா, இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 491 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது, கோலி சர்மாவின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
அதுபோல, நேற்றைய விளையாட்டில் இரண்டு கேட்ச் பிடித்து, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 100 கேட்ச் பிடித்தும் அவர் சாதனை படைத்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டும் 30வது வீரர் கோலி ஆவார். இதன்மூலம் விவியன் ரிச்சர்ட்ஸ், சவுரவ் கங்குலி, சுரேஷ் ரெய்னா ஆகியோரின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.
இந்த பட்டியலில் இலங்கை அணியின் மகிலா ஜெயவர்தனே 218 கேட்ச்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
அஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (160 கேட்ச்கள்) இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் மொகமது அசாருதீன் (156 கேட்ச்கள்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கள் 140 கேட்ச்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.