டில்லி:

ஏப்ரல் 7ம் தேதி ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றன.

11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 7ம் தேதி தொடங்குகிறது. தொடக்க விழா ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்டி) அணியும் விளையாடுகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

ஏப்ரல் 10ம் தேதி சென்னை அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியும் விளையாடுகின்றன. இந்த போட்டி சென்னையில் நடக்கிறது. மே 27ம் தேதி மும்பையில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.