முன்னாள் டென்னிஸ் சாம்பியனான அமெரிக்காவை சேர்ந்த ஆண்ட்ரே அகாசி, சுவிஸ் வீரரான பெடருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தை சேர்ந்த  பெடரர்,  தர வரிசையில் முதலிடம் வகிக்க வாழ்த்துவதாக  ஆண்ட்ரே அகாசி பாராட்டி உள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ராபின் ஹேஸை மூன்று செட்களில் தோற்கடித்தார்.

அதைத் தொடர்ந்து பிரபல வீரரும் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரருமான  ரஃபேல் நடாலையை வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ள இறுதி போட்டியில் சந்திக்க உள்ளார்.

இதன் மூலம் 2012ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது முதல் முறையாக தரவரிசையில் அவர் முதலிடம் பிடித்தார். 36 வயதில் ரோஜர் ஃபெடரர் முதல் இடத்தைப் பிடித்து இருப்பதால் அதிக வயதில் தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரே அகஸ்ஸி, 33 வயதில் தரவரிசையில் முதலிடம் பெற்று இருந்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

இந்நிலையில் முன்னாள் சாம்பியனான ஆண்ட்ரே அகாசி பெடருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

36 வயதுடைய  பெடரர் ATP தரவரிசையில் முதலிடம் வகிக்கின்ற  வீரர். அகாஸி முன்னாள் வீரர். கடந்த 2003 ஆம் ஆண்டில் அவர் கடைசியாக அமெரிக்க முதல் இடத்தில் 33 வது இடத்தைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், தற்போது  பெடரர் அந்த சாதனையை தொடர்வதால் தனக்கு எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்றும், பெடரும் மேலும் சாதனையை நோக்கி உயர்ந்துகொண்டிருக்கிறார்.. அவருக்கு வாழ்த்துக்கள் என்று கூறி உள்ளார்.