மெக்சிகோவில் நள்ளிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி உள்ளது.
மெக்சிகோ தலைநகரான மெக்சிகோ சிட்டிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மெக்சிகோவின் ஓசாகா மாகாணத்தின் மையப்பகுதியில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மெக்சிகோ சிட்டியின் தென்கிழக்கு பகுதியில் 346 கிலோ மீட்டர்தொலைவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக வும், இதன் காரணமாக கட்டிங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நில நடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரம் இன்னும் தெரியவில்லை.
ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8ந்தேதி மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட 8.1 அளவிலான நிலநடுக்கத்தினால் 216 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.