மயிலாடுதுறை:

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடந்த 2003ம் ஆண்டு மயலாடுதுறையில் பேரணி நடத்தினர்.

அப்போது காவல்துறை அனுமதித்த பாதையை தவிர்த்து ஊர்வலம் சென்றது. இதனால் பிரச்சினை ஏற்பட்டது. காவல்துறை ஆய்வாளர் உட்பட சில காவல்துறையினர் தாக்கப்பட்டனர். காவல்துறை வாகனங்களும் தாக்கப்பட்டன. காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.

இது குறித்த வழக்கு மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கில், திருமாவளவன் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது இத குறித்து கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன், காவல்துறை பொய் வழக்கு தொடுத்துள்ளதாகவும், வழக்கில் முறைப்படி ஆஜராவேன் என்றும் தெரிவித்துள்ளார்.