சியோல்:

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாசங் நகரில்  நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் வடகொரியாவும் கலந்துகொண்டுள்ளது.

வடகொரியாவுக்கும், தென் கொரியாகவுக்கும் இடையே சுமார் 50 ஆண்டு காலமாக  பகைமை இருந்து வரும் நிலையில், வடகொரிய வீரர்கள் தென்கொரியாவுக்கு வந்தது வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டி விழாவில் கலந்துகொள்ள  வடகொரியாக சார்பாக,  வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் தங்கை கிம் யோ ஜாங், வடகொரிய நாடாளுமன்றத் தலைவர் கிம் யாங் நாம் ஆகியோர் வந்திருநதனர்.

அதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி  தொடக்க விழாவில் இரு கொரியாவைச் சேர்ந்த குழுவினரும் ஒன்றாக ஒரு கொடியின்கீழ் அணிவகுத்துச் சென்றனர். இது உலக நாடுகளிடையே வியப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் கலந்துகொள்ள தென்கொரியா வந்த  வடகொரியத் தலைவர்களுக்குத் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தனது இல்லத்தில் விருந்தளித்துச் சிறப்பித்தார்.

அதைத்  இந்நிலையில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரியத் தலைவர்களைத் தன் அலுவலகத்துக்கு அழைத்துப் பேச்சு நடத்தினார்.

இந்நிலையில், தென்கொரிய அதிபரை வடகொரியாவுக்கு வருமாறு வடகொரிய அதிபர் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

தென்கொரியாவில் முதல் முறையாக நடைபெறும் இந்த  குளிர்கால ஒலிம்பிக் போட்டி போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 91 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.