புவனேஸ்வர்

ந்தியாவின் புகழ்பெற்ற இனிப்பு வகைகளில் ஒன்றான ரசகுல்லா ஒரிசாவை சேர்ந்தது என ஒரிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பூரி ஜகன்னாதர்

சென்னையை சேர்ந்த ஒரு ஆர்வலர் இரு மாதங்களுக்கு முன்பு ரசகுல்லா மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு இனிப்பு வகை என தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.  இதற்கு மேற்கு வங்கத்தில் பெரிதும் வரவேற்பு கிடைத்தது.   அதே நேரத்தில் மேற்கு வங்கத்தின் அண்டை மாநிலமான ஒரிசாவில் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

ஒரிசாவை சேர்ந்த புண்ணிய உத்கல் டிரஸ்ட் என்னும் நிறுவனமும், சந்தோஷ் குமார் சாகு என்னும் சமூக ஆர்வலரும் வழக்கு மனு ஒன்றை ஒரிசா உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ளனர்.    அந்த மனுவில், “ரசகுல்லா என்னும் இனிப்பு வகை ஒரிசாவை சேர்ந்தது ஆகும்.

பூரி ஜகன்னாதர் கோவிலில் நெடுங்காலமாக ரசகுல்லா படைக்கப்பட்டு பிரசாதமாக அளிக்கப்பட்டு வருகிறது.    எனவே உடனடியாக இந்த இனிப்பு வகையை ஒரிசாவின் பாரம்பரிய உணவு வகை பட்டியலில் சேர்க்க வேண்டும்.   மேலும் ஒரிசா மாநிலத்துக்கு இதற்கான காப்புரிமை வழஙக வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.