சென்னை,
தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு வழங்கப்பட உள்ள அம்மா ஸ்கூட்டர் மானியத்துக்கு, விண்ணப்பிக்க கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில, மேலும் 5 நாட்கள் நீட்டித்து தமிழக அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி வரும் 10ந்தேதி வரை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ‘ஸ்கூட்டர்’ வாங்கிக்கொள்ள ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். ‘அம்மா இருசக்கர வாகன திட்டம்’ எனும் பெயரில் தமிழக அரசால் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டு மானிய விலையில் ‘ஸ்கூட்டர்’ வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான கடைசி நாள் பிப்ரவரி 5ந்தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பெண்களின் வேண்டுகோளை ஏற்று விண்ணப்பம் அளிப்பதற்கான கால அவகாசம் வரும் 10ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக வரும் 24ந்தேதி மறைந்த தமிழக முதல்வர். ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று, அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைப்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது.