பெங்களூரு:

ஐ.பி.எல்., தொடருக்கான  இரண்டாவது நாள் ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் ராஜஸ்தான் அணிக்காக ரூ.11.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்தியன் பிரிமியர் லீக்  (ஐ.பி.எல். ) தொடருக்கான 11வது சீசன் வரும் ஏப்ரல் 7 ல் துவங்கி மே 27 வரை நடக்க இருக்கிறது.  இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் பெங்களூருவில் நேற்று துவங்கியது. இன்று இரண்டாவது நாள் ஏலம் நடந்தது.

சென்னை அணி: ஷர்துல் தாகூரை ரூ.2.6 கோடிக்கு ஏலம் எடுத்தது.
பஞ்சாப் அணி: மோகித் சர்மா 2.4 கோடி ரூபாய்க்கும், மஜோஜ் திவாரியை – ரூ.1 கோடிக்கும் ஏலம் எடுத்தது.

மும்பை அணி:-பென் கட்டிங்கை ரூ.2.2 கோடிக்கும், சவுரப் திவாரியை ரூ.80 லட்சம்த்திற்கும், எவின் லெவிசை ரூ.3.8 கோடிக்கும், ராகுல் சஹாரை ரூ.1.9 டிக்கும் ஏலம் எடுத்தது.

டில்லி அணி: குர்கீரத் சிங்கை ரூ.75 லட்சத்திற்கும், ஷபாஜ் நதீம் ரூ.3.2 கோடிக்கும் டேனியல் கிறிஸ்டியன் ரூ.1.5 கோடிக்கும் ஜெயந்த் யாதவ் ரூ.50 லட்சத்திற்கும் ஏலம் எடுத்தது.

ராஜஸ்தான் அணி: கவுதம் கிருஷ்ணப்பா கவுதம் ரூ.6.2 கோடிக்கும், முருகன் அஸ்வினை ரூ.2.2 கோடிக்கும் தவால் குல்கர்னியை ரூ.75 லட்சத்திற்கும் வாஷிங்டன் சுந்தரை ரூ.3.2 கோடிக்கும், பவன் நெகி ரூ.1 கோடிக்கும், ஜெய்தேவ் உனாத்கட் ரூ.11.5 கோடிக்கும் ஏலம் எடுத்தது.

ஐதராபாத் அணி: முகமது நபியை ரூ.1 கோடிக்கும், சந்தீப் சர்மாவை ரூ.3 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது.

விலை போகாத வீரர்கள்: 

கேசி கரியப்பா, இக்பால் அப்துல்லா ஈயோன் மோர்கன், அலெக்ஸ் ஹேல்ஸ், சான் மார்ஸ், லென்ட்ல் சிம்மன்ஸ், டிராவிஸ் ஹெட் , கோலின் இங்ராம், கோரி ஆண்டர்சன், மோசிஸ் ஹென்ட்ரிக்ஸ், ரிரி தவான் ஆகியோர் விலை போகவில்லை.

இன்று ராஜஸ்தான் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட ஜெய்தேவ் உனாத்கட்தான் இந்தத் தொடரில்  அதிக விலைக்கு ஏலம் போன இந்திய வீரர்  ஆவார்.