மும்பை:

டுத்த ஆண்டு நடைபெற்ற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ளும்  வகையில்  மகாராஷ்டிராவில்  காங்கிரஸ் தலைமையில் 7 கட்சிகளை கொண்ட கூட்டணி உருவாகி உள்ளது. எதிர் பறைசாற்றும் விதமாக நேற்று 7 கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

மகாராஷ்டிரா மாநிலத்தில்  பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக பாஜகவை சேர்ந்த தேவேந்திரா பட்னாவில் இருந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சிவசேனா பொதுக்குழுவில், பாஜகவுடனான உறவை முறித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில்,  பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெறக்கூடாது என்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதற்கு முன்னேற்பாடாக நேற்று காங்கிரஸ் தலைமை யில்  7 கட்சிகள் இணைந்த  பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஐக்கிய ஜனதா தளம் (அதிருப்தி) தலைவர் சரத்யாதவ், சி.பி.எம்.மின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டின் டி.ராஜா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தினேஷ் திரிவேதி. தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஓமர் அப்துல்லா, காங்கிரசின் சுஷில்குமார் ஷிண்டே, பதிதார் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் படேல் ஆகிய ஏழு கட்சிகளின் தலைவர்களும் தங்களின் கைகளை ஒன்றாக கோர்த்தபடி வீதியில பேரணி நடத்தினர்.

பேரணியின்போது, பாஜக அரசுக்கு எதிராகவும்,  அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்று என்றும்  கோஷமிட்டனர்.

ஓவல் மைதானத்தில் தொடங்கிய  பேரணி தெற்கு மும்பையின் கேட்வே ஆப்இந்தியாவில் நிறைவடைந்தது.

மும்பையின் ஓவல் மைதானத்தில் ஏழு கட்சிகள் தலைவர்கள் ஒன்றாக கைகோர்த்தபடி பேரணியில் சென்றது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.