ஒரு குடியரசின் கதை..!
இனிமேலும்
இவர்களை
அடக்கி ஆள
முடியாதென
இறுதி முடிவு
எடுத்தது
இங்கிலாந்து…
முக்கடல் சூழ்ந்த
பாரதத்திற்கு
விடுதலை தர
மூவர் குழு
அமைத்தார்
பிரிட்டிஷ்
பிரதமர் அட்லி…
மற்றவகை
ஏற்பாட்டினை
செய்வதற்கு
மவுண்ட்பேட்டன்
வந்திறங்க…
இந்தியாவை
இரு
துண்டாக்கி
பன்னிரண்டு
மாகாணங்களில்
பம்பாய்,
சென்னை,
ஒரிசா,
மத்தியபிரதேசம்
உத்தரபிரதேசம்
பீகார்,
மேற்கு வங்கம்,
அசாமின்
வடக்குப் பகுதி
பஞ்சாபின்
கிழக்குப்பகுதி
இவையாவும்
இந்தியாவுடன்…
மீதமுள்ள
பகுதிகள்
பாகிஸ்தானுக்கு…
ஐநூற்று
அறுபத்தைந்து
சமஸ்தானங்கள்
அவரவர்
விருப்பம்போல்…
இப்படி –
வந்தேறி பரங்கியன்
வகிடெடுத்துப் பிரித்து
வழங்கினான்
சுதந்திரம்!
* இங்கிலாந்து
முடியாட்சி கீழ்
இயங்கும்
தன்னிச்சையான
பகுதி
இந்தியா என்கிற
பிரகடனம்
ஆகஸ்ட் 15
1947 நள்ளிரவில்
வெளியிடப்பட்டது…
* பிரிவினையோடு
சுதந்திரத்தை
பிரிட்டானியன்
தந்துவிட்டு
பெட்டி படுக்கை
கட்டினான்…
மூதறிஞர்
ராஜாஜி
முதல்
கவர்னர்ஜெனரல்
ஆனார்…
நமக்கென்று
ஓர் அரசியல்
அமைப்புச் சட்டம்
உருவாக்கிட…
அண்ணல்
அம்பேத்கர்
தலைமையில்
அறிஞர் குழு
அமைக்கப்பட்டது…
* பல மொழிகள்
பல இனங்கள்
பல்கிப் பெருகிய
மக்கள் தொகை
ஆனாலும்
வேற்றுமையில்
ஒற்றுமையாகும்
பரந்து விரிந்த
பாரத தேசத்திற்கு
ஏதுவான
அரசியல் சாசனம்
அரங்கேறியது!
* அது –
பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்பட்டு
பொதுமக்கள்
பார்வைக்கும்
வைக்கப்பட்டது…
திருத்தங்கள்,
பிறகு
ஒப்புதல் என
ஒரு வழியாய்
நிறைவேறிட…
* ஜனவரி 26
1950-ல்
இந்திய அரசியல்
சாசனம்
அமலுக்கு வந்தது…
பூரண சுயராஜ்ஜியம்
என்கிற கனவு
அன்றுதான்
பூரணமாய்
நனவானது…
* இந்திய குடியரசின்
முதல் குடியரசு
தலைவராக
ராஜேந்திரபிரசாத்
முடிசூடினார்…
இத் திருநாளே
இந்தியக் குடியரசு
தினமானது…
இந்நன்னாளில்
பாரதத்தின்
பண்பாடு
ஒற்றுமையை
பறைசாற்றும்
ஊர்வலங்கள்
கலை நிகழ்ச்சிகள்
முப்படை வீரர்களின்
கம்பீர அணிவகுப்பு
வீரதீர செயல்
புரிந்தோருக்கு
விருது வழங்கல்
நட்புறவு
நல்லிணக்கம்
பேணும் வகையில்
பிறநாட்டு
தலைவர்கள்
சிறப்பு விருந்தினராக
பங்கேற்று
கவுரவித்தல்
என்றெல்லாம்
நாடே குதூகலமாய்
கொண்டாடும்
நன்னாள்…
இதுவே நமது
குடியரசுத் திருநாள்
எனும் பொன்னாள்..!