மேஷம்

அமைதியும் நிம்மதியுமாக வாரம் இனிதாக அமையும். குழந்தைகளோ பெற்றோரோ மனைவியோ .. குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்வதுடன் அலுவலகத்திலும் உங்க கிட்ட முறைச்சுக்கிட்டு இருந்தவங்க உங்களை அன்போட பார்க்க ஆரம்பிப்பாங்க. எதற்கெடுத்தாலும் சற்று அதிகக் கோபப்படும் உங்க குணம் சமீபத்தில் மாறி மென்மை கூடியிருப்பதுதான் இதற்குக் காரணம். இதனால் ஏற்படப்போகும் கூடுதல் நன்மை என்ன தெரியுமா? உங்க ஆரோக்யம் மேம்படும். சமீபத்தில் இரக்கப்பட்டு நீங்க ஒருத்தருக்கு செய்த நன்மை பெரிய நல்ல விளைவை ஏற்படுத்தப்போகுது.

ரிஷபம்

சமீபத்தில் அடிக்கடி எடுத்தேன்.. கவிழ்த்தேன்… உடைத்தேன் என்று நீங்கள் பரபரப்பும் படபடப்புமாய்ச் செயல்படறீங்க. ப்ளீஸ்.. வேண்டாமே.  வழக்கமாய்ப் பொறுப்பும் பொறுமை யும் உள்ளவர் நீங்க. அது போலவே இருந்துட்டுப்போங்களேன். உங்க கிட்ட ஒரு கவர்ச்சி அம்சம் உள்ளது. அதனால்தான் உங்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பாக உள்ளது. நீங்க மிக விரும்பிய ஒரு விஷயம் உறுதியாகப்போகுதுங்க. வெயிட் அண்ட் ஸீ. மம்மிக்கு நிறைய நன்மைகள் உண்டு. சகோதர சகோதரிகளிடம் ஃபைட் வேணாங்க. அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் பொறுத்துப் போங்க.

மிதுனம்

அருமையான பேச்சுத் திறமை உங்க கிட்ட இருக்கு.. ஆனாலும் வாய் ஓயாமல் பேசி என்னங்க புண்ணியம்? நீங்க திட்டமிட்டபடியா எல்லாம் நடக்குது? கடந்த விஷயங்கள்.. நடந்த விஷயங்கள்னு பழசைப் பேசிக்கிட்டு டென்ஷன் ஆகாதீங்க. அடுத்து என்ன ஆகணும்னு பிளான் செய்து அதன்படி நேர்மையா காரியங்களைச் செய்ங்க. எல்லாம் விருப்பம்போல் நடக்கும். வெயில் காயும் போதே வைக்கோலை தயாரிச்சுக்குங்க என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொ உண்டுங்க. அதன்படி இப்ப அருமையான சந்தர்பம் வாகாய் அமைஞ்சிருக்கும்போதே திட்டமிட்டபடி காயின்களை நகர்த்துங்க. பலன் பெஸ்ட்டா யிருக்கும்.

கடகம்

சம்பாதிப்பது பற்றி நீங்க செய்திருக்கும் திட்டங்கள் சரியானவையா என்று உங்களின் நலம் நாடறவங்க கிட்டேயும் ஜோசியரிடமும் மட்டும் கேட்காமல் உங்க மனச்சாட்சியிடமும் கேட்டுத் தெளிவு படுத்திக்கிட்டு அதன் பிறகு நீங்க முயற்சியில் இறங்குவதையும் முடிவெடுப்பதையும் யார் தடுக்கறாங்க? ஆரோக்யத்தைத் தூசு மாதிரி மதிக்கறீங்க. தயவு செய்து அதன் மதிப்பை உணருங்க. முக்கியமா.. ஆரோக்யத்தைக் கெடுக்கக்கூடிய விஷங்களில் தயவுசெய்து ஈடுபடாதீங்க. அப்படி உங்களைத் தூண்டறவங்க பக்கம் தலை வெச்சும் படுக்காதீங்க. சுத்தமா ஒதுக்கிடுங்க. ஒதுங்கிடுங்க.

 சிம்மம்

கொஞ்சம் சுறுசுறுப்பு என்னும் பட்டனைத் தட்டிட்டீங்கன்னா நீங்க சூப்பராயிடுவீங்க. வேற ஒண்ணுமில்லீங்க.. நீங்க கொஞ்சம் அலட்சியமாய்க்  கவனத்தைத் திருப்பறீங்க. நீங்க உண்டு உங்க வேலை/ படிப்பு/ குடும்பம் உண்டுன்னு இருப்பதில் நீங்க பாஸ் மார்க்தான் ஆனால் கூடவே உங்க சோம்பம் உண்டுன்னு இருக்கீங்க பாருங்க.. அதான் உதைக்குது. படிக்கும் மாணவர்கள் என்றால் சற்று அதிகக் கவமாய் இருக்கணுங்க. பெண்களோ ஆண்களோ.. எந்த வயதினராயினும் வம்புகளையோ வதந்திகளையோ பரப்பவே செய்யாதீங்க. உங்களை மாட்டிவிட மிஸ்டர் விதி ரெடியாயிருப்பாரு.

கன்னி

படபடவென்று ஒரு போக்கு. யாரையும் உடனே தூக்கி அடிக்கும் பொறுமையின்மை… அவசரம்.. கோபம்.. இவை கொஞ்சநாளாவே உங்ககிட்ட அதிகமாயிருக்கு இல்லையா? ப்ளீஸ்.. உடனே உங்களை நீங்களே பரிசீலனை செய்து சரி செய்துக்குங்க. இ,லலாட்டி முதலுக்கே மோசமாகும். அது என்ன முதல்னு கேட்கறீங்களா. நிறைய இருக்கு சொல்ல. உத்யோகம்… ஆரோக்யம்.. உறவுகள்.. எதையும் இழக்க யாரும் விரும்ப மாட்டோம்ல.. அதைத்தான் சொன்னேன். குழந்தைகளால் நிறைய நன்மைகள் ஏற்படும். அவர்கள்  அருமை யாய் முன்னேறுவங்க. வீட்டில் சுப நிகழ்வு உண்டு.

துலாம்

ஆரோக்யம் பற்றியெல்லாம் டென்ஷனாகாதீங்கப்பா. எல்லாம் சரியாகும். உங்க அதிருஷ்டம் .. நல்லா அனுசரிச்சுக்கிட்டுப் போற குடும்பம் அமைஞ்சிருக்கு. குறிப்பா நீங்க குடும்பத்  தலைவர் எனில் உங்க மனைவியைக் கோயிலில் வெச்சுக்கும்பிடணும். ஆனா நீங்க என்ன செய்யறீங்க? சரி விடுங்க. இனிமேயாவது மாத்திக்குங்க. உத்யோகமும் பிசினஸும் வாழ்க்கையைத் திசை திருப்புமளவு நன்மை அளிக்கும். பதவி உயர்ந்து பொறுப்பும் அதிகரிக்கும். சீக்கிரத்தில் வெளிநாட்டுக்குப் போக வேண்டி வரலாம். அல்லது உள்நாட்டிலேயே நிறையப் பயணங்கள் செய்ய வேண்டி வரலாம்.  நல்ல பெட்டியைத் தயாரா வெச்சுக்குங்க.

சந்திராஷ்டமம்: ஜனவரி 26 முதல் ஜனவரி 28 வரை

விருச்சிகம்

எப்பப் பார்த்தாலும் எதுக்கெடுத்தாலும் பயமும் டென்ஷனும் அடையும் உங்களை மாத்தறது கஷ்டம்தான். போதாக்குறைக்கு இப்போ எல்லாலும் பயமுறுத்தறாங்க ஏழரைச் சனி அது இதுன்னு..  பயம் வேண்டாங்க. பெரிய அளவில் எதுவும் ஆகாது. ஜாதகப்படி நல்ல நேரம் நடக்குமானால் ‘அட.. ஜோசியருங்க பயமுறுத்தறது தப்பாயிருக்கே?” ன்னு சந்தோஷமே படுவீங்க. குழந்தைங்க பல விஷயங்களிலும் பெருமைப்படுத்துவாங்க. வயசாவங்களையும் பெரியவங்களையும் நீங்க மதிச்சுப் போற்றிப் பேசறதுதான் உங்க பிளஸ் பாயின்ட்டே. அதை மாத்திக்காதீங்க. ‘

சந்திராஷ்டமம்: ஜனவரி 28 முதல் ஜனவரி 30 வரை

தனுசு

பேச்சினால் நன்மை உண்டாகும். பேச்சினால் பிரச்சினை உண்டாகும். பேச்சினால் முன்னேற்றம் உண்டாகும். பேச்சினால் புகழ் கிடைக்கும். ஆமாங்க. உண்மைதான். எனவே பார்த்து ஜாக்கிரதையாப் பேசுங்க. உங்க வாக்கு ஸ்தானம் அப்பிடி இருக்கு இந்த வாரம். ஆரோக்யத்தைக் கெடுக்கும் விஷயங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து விலகி வர  ஆரம்பிச்சிருக்கீங்க. பாராட்ஸ். கலைத்துறைல இருக்கீங்களா? வாழ்த்துகள். நிறையப் பெரிய முன்னேற்றங்கள்  அடுத்தடுத்துப் படிப்படியா உண்டுங்க. அரசியலா? மிக மிக கவனமாய் இருப்போருக்குப் பிரமாதமான வாரம்.

சந்திராஷ்டமம்: ஜனவரி 30 முதல் ஃபிப்ரவரி 1 வரை

மகரம்

ஏராளமான வெற்றிகள் வரிசையாய் கொலு பொம்மை மாதிரி வந்து உங்க முன்னால் அமரும். குடும்பமும் நண்பர்களும் மகிழ்வார்கள்தான். சந்தேகமே இல்லைங்க. ஆனாலும் எதிரிங்க பொறாமைப்படுவாங்க. அதனால் என்ன பட்டுட்டுப் போகட்டும். நீங்க யார் கிட்டயும் பகைமை பாராட்டாதீங்க. எப்பவும்போல மன்னிச்சு அன்பாவே இருங்க. கடுமையான குணங்கள் அண்டாமல் பார்த்துக்குங்க. ஏன் தெரியுமா? பத்தே நிமிஷத்துல நீங்க சாந்தமாகி அமைதியாயிடுவீங்க.. ஆனால் உங்க எதிரிங்களும் அப்படி இருப்பாங்கன்னு நினைக்க முடியாதில்லையா. அதுக்காகத்தான் சொன்னேன். குட் லக்.

கும்பம்

வர வர உறவினர்களைச் சற்று ஒதுக்கறீங்க. வேணாங்க. அவங்க முக்கியம்.  கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்துக்குங்க. அல்லது அவங்க அட்ஜஸ்ட் செய்ய நினைக்குமளவுக்கு அவங்க கிட்ட நல்லவங்களா நடந்துக்குங்க. கஷ்டம்தான். முயற்சி செய்ங்களேன். இப்போ உங்களுக்குப் பிரமாதமான நல்லநேரம் நடக்குதுங்க. அது என்றைக்கும் இதே மாதிரி அதிருஷ்டமும் வெற்றியும் குடுக்கட்டும். வாழ்த்தறேன். நீங்க மதிக்கும் பெரியவங்க கிட்ட அருமையா நடந்துகிட்டு அவங்க ஆசிகளை வாங்கறீங்க. எனவே உங்க பலம் கூடிக்கிட்டே இருக்கு.

மீனம்

எப்பப்பாரு எல்லாரையும் நம்பி நம்பி… ஹும்.. மாறவே மாட்டீங்க. கருணையும் இரக்கமும் உங்க முக்கிய குணங்கள். சூப்பர். பாராட்றேன். ஆனால் அது யாருகிட்ட காட்டணும்னும்னும் எந்த அளவு காட்டணும்னும் ஒரு வரைமுறை இருக்கில்லையா? அதை நினைவு வெச்சுக்கு ங்க. பாத்திரமறிந்துதானேங்க பிச்சைகூட இடணும். மாணவர்களுக்கு இது பொற்காலம்தான்.  நினைக்க முடியாத முன்னேற்றங்கள் இருக்கும். ஒன்றல்ல இரண்டல்ல.. ஏராளமான வருமானங்களும் பழைய பாக்கிகளும் கடன் வசூல்களும் மனநிறைவையும் பண நிறைவையும் தரும்.