டில்லி

ந்தியாவின் மக்கள் தொகை பெருக்கத்தை அரசு விரைவில் கட்டுப்படுத்தும் என மத்திய அமச்சர் நத்தா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை ஆய்வு அறிக்கையில் இந்தியாவின் மக்கள் தொகை இன்னும் 7 வருடங்களில் சீன மக்கள் தொகையை எட்டி விடும் என தெரிவித்துள்ளது.   தற்போது சீனா உலகில் அதிக மக்கள் தொகை உள்ள நாடாக விளங்குகிறது.     இந்தியா அந்த அளவு மக்கள் தொகையை அடைவதற்குள் மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே. பி,  நத்தா பேசுகையில், ”ஒரு பெண்ணின் கருவுறும் விகிதம் தற்போது நம் நாட்டில் 2.1% ஆத உள்ளது.   இது அதிகமாக இருப்பதால் இதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.   இது சராசரி விகிதம் என்பதால் நாட்டில் அதிகம் உள்ள இடத்தில் இந்த கருவுறும் விகிதம் முதலில் குறைக்கப்பட உள்ளது.    அதன் பிறகு அது நாடெங்கும் விரிவாக்கப்படும்.

ஒரு பெண்ணின் கருவுறும் விகிதம் என்பது நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களையும் கணக்கிட்டு அதன் மூலம் சராசரியாக ஒரு பெண் தனது வாழ்நாளில் எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார் என்பதை வைத்து கணக்கிடப்படுகிறது.    இது  ஒரு சில இடங்களில் அது குறைந்த பட்ச அளவை விட அதிகமாக உள்ளது.   அத்தகைய இடங்கள் முதலில் ஆய்வு செய்து அறியப்பட்டன

நாட்டில் உள்ள 7 மாநிலங்களில் உள்ள 146 மாவட்டங்களில்  கருவுறும் விகிதம் அதிகமாக உள்ளது    அசாம், பீகார், சத்திஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய அம்மாநிலங்களில் முதலில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட உள்ளது     கருத்தரிப்பு உபகரணங்கள், மருந்துகள், கலந்தாய்வு, குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழுப்புணர்வுக் கல்வி ஆகியவைகள் மூலமாக மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கை  எடுக்கப்பட உள்ளது”  எனத் தெரிவித்தார்.