சென்னை,

மிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாவட்டந்தோறும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இதற்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தும், கருப்பு கொடி காட்டியும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தருமபுரி மாவட்டம் வந்த ஆளுநர்,  ஒட்டப்பட்டியை அடுத்த கக்கன்-ஜி-புரத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கட்டப்படும் கழிவறைப் பணிகளை பார்வையிட்டார். பின்னர் பொதுமக்களுடன் இணைந்து, தூய்மை இந்தியா உறுதிமொழியை ஆளுநர் ஏற்றார். ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியில்  திமுகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்டம் வந்து தூய்மை பணிகளை மேற்கொள்கிறார். வேலூருக்கு  வந்த ஆளுநருக்கும்  திமுகவினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார்  500க்கும் மேற்பட்ட திமுகவினர், விருகம்பட்டு பகுதியில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.