தஞ்சாவூர்,
நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தஞ்சை மாநகராட்சி ஆணையர் மீது பொதுமக்கள் பலர் லஞ்சக்குற்றச்சாட்டு கூறி வந்தனர். இந்நிலையில், தஞ்சை அருகே உள்ள கீழ சாவடியை சேர்ந்த சம்பந்தம் என்பவரிடம் சொத்து தொடர்பான பிரச்சினை சரி செய்ய தஞ்சை மாநகராட்சி ஆணையர் ரூ.75 ஆயிரம் லஞ்சம் கேட்டதை தொடர்ந்து அவர் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தார். அதையடுத்து, ஒழிப்பு துறையினரின் அறிவுறுத்தலின் பேரில், சம்பந்தம் ஆணையர் வரதாராஜனுக்கு ரூ. 75 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார்.
அப்போது பணத்தைஆணையர் வாங்கியதும, பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்புப் படையினர் ஆணையாளரை கைது செய்தனர். மேலும் அவருக்கு இடைத் தரகராக செயல்பட நாகராஜன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரின் சேலம் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் உள்ள அவரது வீட்டிலும் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் சந்திரமவுலி தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.
நேற்று மாலை தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. வங்கி ஆவணங்கள், நிலப்பத்திரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது