இஸ்லாமாபாத்:
ஈரானில் இருந்து குல்பூஷண் ஜாதவை கடத்தியவனுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை பணம் அளித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் ஈரானில் தனியார் துறையில் பணியாற்றி வந்தார். அவரை அங்கிருந்து பாகிஸ்தான் உளவுத்துறை ஆள் கடத்தி, பாகிஸ்தானுக்கு கொண்டு சென்றார்.
அங்கு குல்பூஷ்ன் மீது உளவு பார்த்ததாக புகார் சுமத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாடி மரணதண்டனைக்கு தற்காலிக தடையை பெற்றது.
இவ்விவகாரம் தொடர்பாக இன்று உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாநிலத்தில் சுயநிர்ணய உரிமை கோரும் பலூச் ஆர்வலர் மாமா காதிர் பாலோச் என்பவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது:
“ஜெய்ஷ்-உல்-அடல் என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் முல்லாக் ஒமர் இரானி. இவன்தான் ஈரானின் சபாகாரில் இருந்து குல்பூஷனை கடத்தி உள்ளான்.
ஈரான் மற்றும் பக்ரைனில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகங்களிடமிருந்து இந்த பயங்கரவாத இயக்கம் பணம் வாங்கி உள்ளது. இந்த பயங்கரவாத இயக்கம் மும்பை தாக்குதல் சூத்திரதாரியான ஜமாத்-உத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டது.
குல்பூஷனை கடத்திய இரானி மிகக் கொடியவன். பலூச் மக்களை கடத்துவது மற்றும் கொலை செய்வதில் தொடர்பு உள்ளவன். அவனுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கி ஐ.எஸ்.ஐ. தனக்கு தேவையான பணியை நிறைவேற்றி வருகிறது” என்று என மாமா காதிர் பாலோச் கூறிஉள்ளார்.