டில்லி,
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து 3 மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ தலைமை தேர்தல் கமிஷனர் நஜிம் ஜைதி இன்று நண்பகல் அறிவிக்க இருக்கிறார்.
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டப் பேரவைகளின் ஆயுட்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைய இருப்பதால், சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
தலா 60 உறுப்பினர்களை கொண்ட மேகாலயா சட்டமன்றம் மார்ச் 6ந்தேதியும், நாகாலாந்து சட்டமன்றம் மார்ச் 13ந்தேதியும், திரிபுரா சட்டப்பேரவையின் பதவி காலம் மார்ச் 14ந்தேதியும் முடிவடைய இருப்பதால், இந்த 3 மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது.
இந்த மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, ஏற்கனவே 4 பேர் கொண்ட தேர்தல் ஆணையர் குழு மாநிலங்களுக்க சென்று ஆய்வு நடத்தியுள்ள நிலையில், இன்று தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று நண்பகல் 12 மணிக்கு தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.