டில்லி,
இஸ்லாமியர்களிடையே நிலவி வரும் முத்தலாக் என்ற விவாகரத்து முறைக்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
முஸ்லிம் மதத்தில், கணவர் மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறை சட்டம், விரோதமானது என்று கடந்த ஆகஸ்டு மாதம் சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கூறியது.
அதைத்தொடர்ந்து, முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் ‘‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா’’வை தயாரிக்கப்பட்டு, பாராளுமன்ற மக்களவையில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி தாக்கல் செய்தார். அப்போது, பேசிய அமைச்சர் ரவிசங்கர், பெண்களின் உரிமைகள் மற்றும் நீதியை பாதுகாக்கவே இந்த மசோதா. இதில் மதத்திற்கு தொடர்பில்லை என கூறினார்.
இந்த மசோதா மேலவையிலும் நிறைவேற்றப்பட்டதும் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதைத்தொடர்ந்து உடனடியாக அமலுக்கு வரும்.
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில், இஸ்லாமிய நாடுகள் உள்பட முத்தலாக்-குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
முத்தலாக் தடை செய்த நாடுகளும்- வருடமும்.
1, துருக்கி : 1926
2, சைப்ரஸ் : 1926
3, எகிப்து : 1929
4, சூடான் : 1935
5, ஸ்ரீலங்கா : 1951
6, சிரியா : 1953
7, துனிசியா : 1956
8, மொராக்கோ : 1957
9, ஈராக் : 1959
10, பாகிஸ்தான் : 1961
11, ஈரான் : 1967
12, மலேசியா : 1969
13, வங்காள தேசம் : 1971
14, இந்தோனேஷியா : 1974
15, ஜோர்தான் : 1977
16, அல்ஜீரியா : 1984
17, புருனே : 1999
18, யு.எ.இ : 2005
19, கத்தார் : 2006
29, இந்தியா : 2017