மும்பை:
தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி முடிந்ததும் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்கிறது. அந்£ட்டுக்கு எதிராக 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் விளையாட உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடும் 17 வீரர்கள் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது.
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், அஜின்கியா ரகானே, ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ் தோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஒய் சகால், புவனேஷ் குமார், பும்ரா, ஷமி, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடமபெற்றுள்ளனர்.
சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வின் மற்றும் ஜடேஜா, லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வரும் பிப்ரவரி 1ம் தேதி நடைபெறுகிறது.