சேலம்,

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை செய்துகொண்டார். கவர்னர் சேலம் சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் அங்கமுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளது  பரபரப்பாக பேசப்படுகிறது.

 

சர்ச்சைக்குரிய  பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக அங்கமுத்து என்பவர், கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இருந்தார். அப்போது,  பல்கலைக்கழகத்தில் அலுவலகப் பணியாளர் முதல் பேராசிரியர்கள் வரை பலர் நியமிக்கப்பட்டார்கள். அந்த நியமனத்தில் பல முறைகேடுகள் உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரியார் பல்கலைக்கழக நியமன முறைகேடு குறித்து விசாரணை நடத்த உள்ள நிலையில் அவரது தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, பணி நியமனங்கள் தொடர்பான கோப்புகளைக காணவில்லை என கூறப்பட்டது. இதற்கு அங்கமுத்து காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது. இதுகுறித்து கடந்த16-ம் தேதி சேலம் சூரங்கலம் காவல் நிலையத்தில்நிர்வாகம் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் விசாரிக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், தமிழக கவர்னர் பன்வாரிலால் சேலத்தில் இன்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். அவர் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அங்கமுத்து திடீரென இன்று தற்கொலை செய்துகொண்டார்.