சென்னை,

டைபெற்று முடிந்த குஜராத் தேர்தலில் பாரதியஜனதா அதிகார பலம், பணபலம் மூலம் வெற்றி பெற்றுள்ளதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறி உள்ளார்.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்துள்ளது. குஜராத்தில் பாஜ ஆட்சியை பிடித்திருந்தாலும் கடந்த 2012 தேர்தலுடன் ஒப்பிடும்போது சுமார் 20 இடங்களை குறைவாகவே பிடித்துள்ளது.

அதே வேளையில் குஜராத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் எளிமையான தேர்தல் பிரசாரம் காரணமாக அங்கு காங்கிரசின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் நெருக்கடியை தந்தது.

இந்நிலையில், குஜராத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்ர் கூறியதாவது,

குஜரத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதாவின்  அதிகார பலம் மற்றும்  பணபலம் மூலம் வெற்றியை பறித்துள்ளது என்று கூறினார்.

மேலும்,  ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா நீடித்தால் தேர்தல் ஆணையத்தை எதிர்த்து மக்கள் போராடும் நிலை ஏற்படும் எனவும் கூறினார்.