பாஜ முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமல்

சிம்லா,

காங்கிரஸ் ஆட்சி செய்துவந்த இமாச்சல பிரதேசத்தில், பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

 

68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் இன்ற காலை முதலே வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. கால முதலே பா.ஜ.க பெருவாரியான தொகுதிகளில்  பாஜக முன்னிலை பெற்று வருகிறது.

இமாச்சலில் தற்போது வீரபத்ர சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி உள்ளது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் கடன், லேப்டாப் போன்ற பல்வேறு சலுகைகளை காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது.

68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்தில், தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், பாரதியஜனதா 43 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.  காங்கிரஸ் 21 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

இதன் காரணமாக காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து ஆட்சியை இழப்பது உறுதியாகி உள்ளது. அங்கு பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது  உறுதியாகியுள்ளது.