டில்லி

தார் எண்ணை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி டிஜிடல் வங்கிக் கணக்கை தொடங்கிய ஏர்டெல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணின் மூலம் ஏர்டெல் ஈ கே ஒய் சி (Electronic know your customer) உரிமத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரஙகளை எடுத்துள்ளது.    அதன் மூலம் ஏர்டெல் பேமெண்ட் வங்கி என்னும் தங்கள் வங்கிகளில் அவர்களை இணைத்துள்ளது.   வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் அவர்களுடைய ரூ. 47 கோடி பணத்தை தங்கள் ஏர்டெல் பெமெண்ட் வங்கி கணக்குகளுக்கு மாற்றி உள்ளது.

அது மட்டுமின்றி சமையல் எரிவாயு மானியம் உட்பட பல பண வருவுகளும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் வைக்கப்படாமல் ஏர்டெல் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.    ஆதார் ஆணையத்துக்கு இது குறித்து பல புகார்கள் சென்றுள்ளன.    ஆதார் ஆணையம் விசாரணை நடத்தியதில் இது உண்மை என தெரிந்துள்ளது.

அதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ள இ கே ஒய் சி உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.     இதனால் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்கும் பணியை ஏர்டெல் நிறுவனம் தற்போது செய்ய முடியாத நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.