
டில்லி
மேற்கு வங்க மாநில அரசு பாஜக தலைவர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்கவில்லை என டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநில பாஜக தலைவர்களில் முகுல் ராய் ஒருவர் ஆவார். இவர் திருணாமூல் காங்கிரஸில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியில் இருந்தார். அதன் பிறகு அங்கிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். இவர் தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்ட்கப் படுவதாக புகார் அளித்தார். தனது தொலைபேசி மட்டுமன்றி திருணாமூல் அல்லாத அனைத்துக் கட்சி பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புக்களும் ஒட்டுக் கேட்கப்படுவதாக புகார் அளித்தார்.
இந்த வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி விபு பக்ரூ வால் விசாரிக்கப்பட்டது. வழக்கில் மேற்கு வங்க அரசு சார்பில் மாநில டி ஜி ஜி ஒரு பிரமாணப் பத்திரத்தை அளித்தார். அதில், “முகுல் ராய் மற்றும் அவர் குறிப்பிட்டுள்ள எந்த ஒரு அரசியல் தலைவர்களின் தொலைபேசி உரையாடலும் ஒட்டுக் கேட்கப்படவில்லை. மனுதாரரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது.” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, முகுல் ராய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் அந்தப் பிரமாணப் பத்திரம் உறுதி அளித்துள்ளபடி யாருடைய தொலைபேசி உரையாடலும் ஒட்டுக் கேட்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
[youtube-feed feed=1]