டில்லி:

தீபிகா படுகோனே தலைக்கு ரூ. 10 கோடி அறிவித்த ஹரியானா பாஜக தலைவர், தற்போது பத்மாவதி திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள மம்தா பானர்ஜிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து பாஜக தலைவர் சூரஜ் பால் அமு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சுர்பனாவுக்கு என்ன நடந்தது என்பதை மம்தா பானர்ஜி மறந்துவிடக்கூடாது. தீய பெண்ணான சுர்பனாகாவின் மூக்கை லஷ்மணன் அறுத்தார். இதை மம்தா மறுந்துவிடக் கூடாது’’ என்றார். ராமாயணத்தில் ராவணனின் தங்கை சுர்பனாகா என்பது குறிப்பிடத்தக்கது. .

பத்மாவதி திரைப்படத்தை மேற்குவங்கத்தில் வெளியிட உதவுவோம் என்று, இந்த திரைப்பட குழுவினருக்கு எனது ஆதரவு என்று இந்தியா டுடே கான்கிளேவில் மம்தா அறிவித்த மறுநாள் அவருக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பத்மாவதி திரைப்படத்தை வெளியிட பல மாநிலங்கள் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்த படத்தை வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியிட திரைப்பட குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது.

எனினும் இந்த திரைப்படத்தை வெளியிட நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. உச்சகட்டமாக ஒரு மாநில முதல்வரான மம்தா பானர்ஜிக்கு மிரட்டல் விடுக்கும் செயலில் பாஜக.வினர் ஈடுபட தொடங்கிவிட்டனர்.